முதலாவதாக மார்கெட்டிங் குழுவினர் ஸ்பான்சர், விளம்பரதாரர்கள் மற்றும் மலர் விளம்பரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தனர். இந்த மாதம் வரை வருவாய் போக்கு நன்றாக போவதையும் தொடர்ந்து அதே முன்னேற்றத்தை பேணுவதின் அவசியத்தையும் எடுத்துரைத்தனர். அதே போல் பூத் எண்ணிக்கையை பெருக்குவதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்றனர்.
வருகை பதிவு குழுவினர், இதுவரை எவ்வாறு வருகை பதிவு ஆகி உள்ளது என்று விளக்கினர். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் முயற்சியுடன், தன்னார்வலர்கள் உதவியுடன் கடந்த ஒரு மாதத்தில் வருகை பதிவு ஓரளவு முன்னேற்றம் அடைய தொடங்கியுள்ளதையும், தொடர்ந்து அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதின் அவசியத்தையும் தெரிவித்தனர். கலிபோர்னியாவின் நகர் வாரியாக கொடுக்கபட்ட பதிவின் படி பிரிமாண்ட் நகர் முன்னனியிலும் அதை தொடர்ந்து சான் உசே நகரமும் உள்ளது. இந்த பிரிவில் அடுத்த மாதம் டிரைவாலி முன்னுக்கு கொண்டுவர சாவல் விட பட்டது. அது மட்டுமன்றி, அந்த பிரிவில் புதிய நகரங்களும் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது
விழா நிகழ்ச்சி குழு இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தையும் விரிவாக விளக்கினர்.கடந்த வாரத்தில் விழாவிற்காக சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் தனுஷ் மற்றும் திருமதி ஐஸ்வர்யா தனுஷ் வர ஒப்பு கொண்டுள்ளதையும் அறிவித்தனர்.பூத் குழு, வரவேற்பு குழு மற்றும் அரங்க குழு போன்றவை தங்களது பணியை தொடர்ந்ததையும் தெரிவித்தனர்.
மார்கெட்டிங் கமிட்டியினர் தாங்கள் ஆரம்பித்துள்ள புதிய மார்கெட்டிங் முறை மற்றும் Whatsup குழுவினை நகர் வாரியாக அமைத்து ஒவ்வொரு நகரத்திலும் அதற்கான செயலை முன்னெடுப்பது பற்றியும் விளக்கினர்.தன்னார்வலர்கள் ஒவ்வொருவர் செய்ய வேண்டிய மார்கெட்டிங் வேலையும் விளக்கினர்.
TEF கமிட்டியினர் போட்டி Startup Pitchup competition ஆரம்பித்ததை அறிவித்தனர். இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து முன்னனி தொழிலதிபர்கள் கலந்து கொள்ள உள்ளதையும், Start Up கல்விக்கு பெரும்பாலான பேச்சாளர்கள் முடிவு செய்ய பட்டுள்ளதையும் தெரிவித்தனர்.
தமிழ் மன்ரம் சார்பாக திரு. ஆறுமுகம் எவ்வாறு வருகை பதிவை அதிகரிப்பது மற்றும் தமிழ் மன்றம் எடுத்துவரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். திரு. தில்லை குமரன் மகக்ளிடையே பொதுவாக ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவு படுத்தினார். இந்த விழாவானது மற்ற விழா போலல்லாமல் ஒரு Experience என்பதையும் தெளிவு படுத்தினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் விழா ஏற்பாடுகள் நல்ல முறையில் செல்வதையும் உணர்ந்து அடுத்த கூட்டத்தற்குள் தாங்கள் ஆற்ற வேண்டிய பணியை எவ்வாறு திறம்பட முன்னெடுத்து நடத்துவது என்ற சிந்தனையோடு மகிழ்ச்சியோடு கலைந்தனர்.