Monday, March 23, 2015

FeTNA 2015 தமிழ் விழா - தன்னார்வலர்கள் கூட்டம் (மார்ச் மாதம்)

FeTNA 2015 தமிழ்  விழாவிற்கான தன்னார்வலர் கூட்டம் சன்னிவேல் ஆனத்தபவன் உணவகத்தில் நடைபெற்றது. வழக்கம் போல் சுமார் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பெரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற முன்னேற்றங்களை ஆர்வலர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

முதலாவதாக மார்கெட்டிங் குழுவினர் ஸ்பான்சர், விளம்பரதாரர்கள் மற்றும் மலர் விளம்பரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தனர். இந்த மாதம் வரை வருவாய் போக்கு நன்றாக போவதையும் தொடர்ந்து அதே முன்னேற்றத்தை பேணுவதின் அவசியத்தையும் எடுத்துரைத்தனர். அதே போல் பூத் எண்ணிக்கையை பெருக்குவதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்றனர்.

வருகை பதிவு குழுவினர், இதுவரை எவ்வாறு வருகை பதிவு ஆகி உள்ளது என்று விளக்கினர். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் முயற்சியுடன், தன்னார்வலர்கள் உதவியுடன் கடந்த ஒரு மாதத்தில் வருகை பதிவு ஓரளவு முன்னேற்றம் அடைய தொடங்கியுள்ளதையும், தொடர்ந்து அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதின் அவசியத்தையும் தெரிவித்தனர்.  கலிபோர்னியாவின் நகர் வாரியாக கொடுக்கபட்ட பதிவின் படி பிரிமாண்ட் நகர் முன்னனியிலும் அதை தொடர்ந்து சான் உசே நகரமும் உள்ளது. இந்த பிரிவில் அடுத்த மாதம் டிரைவாலி முன்னுக்கு கொண்டுவர சாவல் விட பட்டது. அது மட்டுமன்றி, அந்த பிரிவில் புதிய நகரங்களும் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

விழா நிகழ்ச்சி குழு இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தையும் விரிவாக விளக்கினர்.கடந்த வாரத்தில் விழாவிற்காக சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் தனுஷ் மற்றும் திருமதி ஐஸ்வர்யா தனுஷ்  வர ஒப்பு கொண்டுள்ளதையும் அறிவித்தனர்.பூத் குழு, வரவேற்பு குழு மற்றும் அரங்க குழு போன்றவை தங்களது பணியை தொடர்ந்ததையும் தெரிவித்தனர்.





மார்கெட்டிங் கமிட்டியினர் தாங்கள் ஆரம்பித்துள்ள புதிய மார்கெட்டிங் முறை மற்றும்  Whatsup குழுவினை நகர் வாரியாக அமைத்து ஒவ்வொரு நகரத்திலும் அதற்கான செயலை முன்னெடுப்பது பற்றியும் விளக்கினர்.தன்னார்வலர்கள் ஒவ்வொருவர் செய்ய வேண்டிய மார்கெட்டிங் வேலையும் விளக்கினர்.

TEF கமிட்டியினர் போட்டி Startup Pitchup competition  ஆரம்பித்ததை  அறிவித்தனர். இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து முன்னனி தொழிலதிபர்கள் கலந்து கொள்ள உள்ளதையும், Start Up கல்விக்கு பெரும்பாலான பேச்சாளர்கள் முடிவு செய்ய பட்டுள்ளதையும் தெரிவித்தனர்.

தமிழ் மன்ரம் சார்பாக திரு. ஆறுமுகம்  எவ்வாறு வருகை பதிவை அதிகரிப்பது மற்றும் தமிழ் மன்றம் எடுத்துவரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். திரு. தில்லை குமரன் மகக்ளிடையே பொதுவாக ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவு படுத்தினார். இந்த விழாவானது மற்ற விழா போலல்லாமல் ஒரு Experience  என்பதையும் தெளிவு படுத்தினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் விழா ஏற்பாடுகள் நல்ல முறையில் செல்வதையும் உணர்ந்து அடுத்த கூட்டத்தற்குள் தாங்கள் ஆற்ற வேண்டிய பணியை எவ்வாறு திறம்பட முன்னெடுத்து நடத்துவது  என்ற சிந்தனையோடு மகிழ்ச்சியோடு கலைந்தனர்.




Tuesday, March 3, 2015

FeTNA 2015 தமிழ் விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்



வரும் சூலை 2-5, 2015 ஆகிய தேதிகளில் வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் பொறுப்பேற்று நடத்தும் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை - www.fetna2015.org) தமிழ்த்திருவிழா வெகு சிறப்பாக சான் ஓசே நகரில் சிவிக் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு வகையான நிகழ்வுகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது.தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த இயல், இசை நாடக நிகழ்வுகள், தொழில் முனைவோருக்கான வழிகாட்டி அமர்வுகள், திரைப்படம் தொர்புடைய ஆளுமைகள், தமிழிசை, தமிழர்தம் பண்பாட்டு விழுமியங்களைக் காட்சிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு தரப்பினரையும் கவரும் வண்ணம் எண்பது மணி நேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் உங்கள் செவிகளையும் விழிகளையும் நிறைக்க நிகழ உள்ளன. உங்கள் கோடையைப் பயனுள்ளதாய் கழிக்க இன்றே பதிவு செய்யுங்கள். விழாவின் சிறப்பம்சங்களில் சில.


· திரைப்பாடகர் ஹரிசரன், சூப்பர் சிங்கர் பாடகர்கள் திவாகர், பிரகதி, பூஜா, மகிழினி ஆகியோர் விஜய் டிவி புகழ் பென்னட் இசை குழுவினருடன் இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி · சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளார் திரு. பூமணி, அமெரிக்கவாழ் தமிழறிஞர்கள் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனைவர் வி.எஸ். இராஜம், வைதேகி ஹெர்பெர்ட் போன்ற பல தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் · உங்களுடன் அளவளாவ “ஐ” திரைப்படப் புகழ் எமி ஜாக்சன் உட்பட பல தமிழ்த்திரை உலகின் முன்னனி நட்சத்திரங்கள் · இளையர்களுக்கான இளையர்களால் முன்னெடுக்கப்படும் அமர்வுகள் · அமரர் கல்கியின் காலத்தால் அழியாத காவியமான சிவகாமியின் சபதம் 3 மணி நேர நாடகமாக உங்கள் கண் முன்னே! · தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமான சிலிக்கன் வாலியின் முன்னனி அமெரிக்கத் தொழில் துறை வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல தொழில்துறை முன்னோடிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு. (http://tef2015.org/) · உங்களுக்குள்ளும் ஒரு தொழிலதிபர் இருக்கக்கூடும். உங்கள் யோசனைகளை வெற்றி பெரும் தொழில் நிறுவனமாக்க அனைத்து துறை வல்லுநர்களைக் கொண்டு ஒரு நாள் முழுதும் start-UP கல்வி, start-UP போட்டி,தொழில் முனைவோர் பட்டறை,முன்னனி தொழில் துறை தலைவர்களின் ஆலோசனைகள், அமெரிக்க வாழ் தமிழ் சாதனையாளர்களுக்கு விருது மற்றும் அவர்களுடன் மதிய உணவுடன் Business Networking -க்கான வாய்ப்பு (விழாவிற்கு வருபவர்களுக்கு சலுகை விலையில் அனுமதி சீட்டு) · மருத்துவத்துறையில் பணியாற்றுவோர் பயன் பெரும்விதத்தில் ‘தொடர் மருத்துவக் கல்வி’ (Continuing Medical Education) வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. · திரு. மணிமாறன் மற்றும் திருமதி மகிழினியின் பறை இசை நிகழ்ச்சியுடன் பல்வேறு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுத்தொடர்புடைய நிகழ்ச்சிகள் · முனைவர் சௌமியா அவர்கள் வழங்கும் ‘தமிழிசை’ நிகழ்ச்சி, குழந்தைகளுக்கு தமிழிசை பயிற்சிப் பட்டறை · கவிமாமணி அப்துல் காதர் அவர்கள் தலைமையில் ’ஆர்த்தெழு நீ!’ என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கம் · கவிஞர் சுமதி ஸ்ரீ அவர்கள் நெறிப்படுத்தி நடத்தும் அனல் பறக்கும் கருத்துக்களம் · சன் டிவி புகழ் கல்யாண மாலை நிகழ்ச்சியுடன் அமெரிக்க மண்ணில் நடத்த இருக்கும் மாபெரும் ’நவீன திருமணம்’ இணை அமர்வு நிகழ்ச்சி. · PSG College,College of Engineering - Guindy மற்றும் பல கல்லூரிகளின் Alumni சந்திப்புகள் · அனைவரும் கலந்து கொள்ளகூடிய தமிழ் இலக்கிய வினாடி வினா மற்றும் தமிழ்த்தேனீ போன்ற ஆர்வத்தைத்தூண்டும் போட்டிகள் . சிறந்த குறும்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்படும் நிகழ்ச்சி - உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் திறனை வெளி கொணரும் புகைப்படம், சித்திரம், கவிதை மற்றும் திருக்குறள் போட்டிகள் · இத்துடன் வளைகுடா பகுதியின் முன்னனி உணவகங்களின் வாய்க்கு சுவையான தமிழ் மரபு சார் பல்சுவை உணவுடன் விருந்தோம்பல்


ஒரே விழாவில் இத்தனை நிகழ்ச்சிகளா? ஆச்சர்யம் ஆனால் உண்மை. உடனடியாக விழாவிற்கு பதிவு செய்யுங்கள்