FeTNA 2014 விழா பற்றிய நினைவுகளை கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் மணல்வீடு என்ற இதழில் பகிர்ந்துளார்கள். FeTNA 2015 தமிழ் விழா பற்றிய முன்னோட்டமாக இதை பார்க்களாம்.
மணல்வீடு என்ற இதழ் திரு ஹரிகிருஷ்ணா அவர்களால் தொன்மையான தமிழ் கலைகளை பற்றிய செய்திகளை வெளி கொணர நடத்தபடும் இதழ் ஆகும்
அழிந்து வரும் இந்த கலைகளை காப்பாற்ற திரு ஹரிகிருஷ்ணா அவர்கள் கூத்து பள்ளி தொடங்கி அடுத்த தலைமுறையினருக்கு இந்த கலையின் வடிவம் மாறாமல் தற்போதைய புகழ் பெற்ற கலைஞர்கள் மூலம் பயிற்ச்சி கொடுக்க முயற்ச்சி எடுத்து வருகிறார். FeTNA 2014 விழா மூலமும் அதை தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு தமிழ் சங்கங்களிலும் தோல்பாவை கூத்து நடத்தி அமெரிக்க தமிழர்களுக்கும் இங்கு வாழும் குழந்தைகளுக்கும் இந்த அரிய கலையினை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.
இந்த அமெரிக்க பயணமானது அவரது கனவு திட்டமான கூத்து பள்ளியை தொடங்குவதற்கு சுமார் $7500 நிதியாக கிடைத்துள்ளது. நமது வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தில் அவர் தோலபாவை கூத்து நடத்தியது நமக்கெல்லாம் பசுமரத்தாணி போல் நினைவில் இருக்கிறது.இந்த உதவியில் வளைகுடா பகுதி தமிழர்களின் நன்கொடையும் குறிப்பிட தகுந்த அளவு உள்ளது என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.
வட அமெரிக்க பேரவையின் (FeTNA) தமிழ் விழா இது போன்ற அழிந்து வரும் கலைகளை உயிப்பிக்கவும் உதவுகிறது என்பது இது ஒரு சிறந்த உதாரணம்.
அதுமட்டுமன்றி இது போன்ற கலைஞர்களை பேரவை இந்தியாவிலிருந்து பொருட்செலவு மற்றும் விசா ஏற்பாடு போன்ற பணிகளை செய்து அழைத்து வருவதன் மூலம் பிற தமிழ் சங்கங்கள் அவர்களை தங்களது பகுதிக்கு எளிதில் அழைக்க முடிகிறது. பேரவையின் இந்த அறிய பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துவோம்.
பின் குறிப்பு:
ஹரிகிருஷ்ணாவின் களரி கூத்து பள்ளிக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
9894605371
9677520060
தஙதங்களின் தமிழ்த்தொண்டு தொடர வாழ்த்துகிறேன்
ReplyDeleteநன்றி கவியாழி கண்ணதாசன்
ReplyDelete