Sunday, January 11, 2015

FeTNA 2015 விழா - தன்னார்வலர்கள் கூட்டம் - 3

FeTNA 2015 விழாவிற்கான தன்னார்வலர்கள் கூட்டம் இன்று (1/11/2015) மிலிபிடாஸ் திருப்பதி பீமாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இது மூன்றாவது மாதாந்திர கூட்டம் ஆகும். 50க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர்.விழாவிற்கு திரு.குணா தலைமை தாங்கி வழிநடத்தினார்.  சென்ற கூட்டத்தில் செயல் பொருளாக வைத்திருந்த corporate நிதி இரட்டிக்கும்  செய்தி பற்றிய விவரங்களை வலைதளத்தில்   சேர்த்திருப்பதை உறுதி செய்தார்.திரு. தில்லை குமரன்  கடந்த ஒரு மாதத்தில் நடந்த முன்னேற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார். புதியதாக வடிவமைக்க பட்ட விளம்பர மாதிரியை அனைவருக்கும் காட்டினார்.

புதியதாக முடிவு செய்யபட்ட விழா விருந்தினர்கள் பற்றி கூறினார். கீழ்காணும் புதிய விருந்தினர்கள் தேர்வு செய்யபட்டுள்ளனர்.

1. சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழறிஞர் - பூமணி
2. பாரம்பர்ய பறை இசை -  மணிமாறன் மற்றும் மகிழினி
3. விஜய்  தொலைகாட்சி புகழ். Bennet and Band
4. பாடகர்கள் ஹரிசரன், திவாகரன், பிரகதி, மகிழினி மற்றும் பூஜா.

மார்கெட்டிங் மற்றும் விளம்பரங்களை  சேர்க்கும் பணியின் முக்கியத்துவத்தையும் அதற்கான அனைவரின் உதவியையும் கோரினார்.தன்னார்வலர்கள் அனைவரும் கொடைவள்ளலாக வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அது மட்டுமன்றி பல்வேறு கமிட்டிகளுக்கு தன்னார்வல தொண்டர்கள் தேவை படுவதாகவும் கூறினார். www.fetna2015.org என்ற வலைதளத்தில் அனைத்து கமிட்டிகளின் பெயரும் உள்ளதாகவும் அவரவை விருப்பபடும் கமிட்டிகளில் இணையுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.


அடுத்ததாக பல்வேறு குழுக்கள் இதுவரை செய்துள்ள பணிகள் பற்றிய குறிப்பு தெரிவிக்கபட்டது.

வளைகுடா பகுதி தமிழ் மன்றம் நடத்த இருக்கும் பொங்கல் விழா பற்றிய செய்தியும் அதில் பங்கு பெற அனைவரையும் வரவேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு வளைகுடா பகுதியின் பல இடங்களிலிருந்து தன்னார்வலர்கள் வந்ததோடு சாக்ரிமென்டோ பகுதியில் இருந்து கூட வந்து இருந்ததை காணும் போது அனைவரும் முழு மூச்சோடு செயல்பட்டு இந்த விழாவின் வெற்றிக்கு வழிவகை செய்வார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது.

1 comment:

  1. Around 75+ volunteers attended this meeting. Thanks for all of their participation on a playoff evening.
    On Pongal day, registration is scheduled to open. Expect large number of registration

    ReplyDelete